எனக்கு இலவச மின்சாரம் வேண்டாம்... கர்நாடக மேல்சபை பாஜக சபாநாயகர் அறிவிப்பு

கர்நாடகா: கர்நாடக மேல்சபை சபாநாயகராக உள்ள பா.ஜ.,வை சேர்ந்த பசவராஜ் ஹோரட்டி, அரசின் இலவச மின்சாரம் வேண்டாம் என அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், பெண்களுக்கு 10 கிலோ இலவச அரிசி, 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

அதன்படி, ஒவ்வொரு வாக்குறுதியையும் அரசு நிறைவேற்றி வருகிறது. இந்நிலையில் இலவச மின்சார திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசின் இலவச திட்டங்கள் தேவையில்லாதவர்கள் இதுகுறித்து அரசை அணுகலாம் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், கர்நாடக மேல்சபை சபாநாயகராக உள்ள பா.ஜ.,வை சேர்ந்த பசவராஜ் ஹோரட்டி, அரசின் இலவச மின்சாரம் வேண்டாம் என அறிவித்துள்ளார். கெஸ்காம் (உப்பள்ளி மின்சார வாரியம்) இயக்குனருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், கர்நாடக அரசிடமிருந்தோ அல்லது எனது குடும்பத்தினரிடமிருந்தோ 200 யூனிட் இலவச மின்சாரம் எனக்கு வேண்டாம்.

கர்நாடக அரசு மக்களுக்கு வாக்குறுதி அளித்தபடி 200 யூனிட் மின்சார திட்டத்தை நிறைவேற்றிய காங்கிரஸ் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திட்டம் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்றார்.