மக்கள் முன்னிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வேன்; பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதி

பிரதமர் உறுதி... 40 வயதுக்கு மேற்பட்ட நல்ல ஆரோக்கியமான நபர்களுக்கு தடுப்பூசி வழங்கும் முறை வரும்போது, நிச்சயமாக தான் உற்சாகமாக மக்கள் முன்னிலையில் தடுப்பூசியை செலுத்திக் கொள்வேன் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

முதற்கட்டமாக சுகாதார முன்களப் பணியாளர்களுக்கு ஃபைஸர்- பயோ என்டெக் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்குப் பிரதமர் ஜஸ்டின் அளித்த பேட்டியில், ‘கனடாவில் தடுப்பூசி பணிகள் தொடங்கியுள்ளன.

40 வயதுக்கு மேற்பட்ட நல்ல ஆரோக்கியமான நபர்களுக்கு தடுப்பூசி வழங்கும் முறை வரும்போது நிச்சயமாக நான் உற்சாகமாக மக்கள் முன்னிலையில் தடுப்பூசியை செலுத்திக் கொள்வேன்’ என கூறினார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, எதிர்வரும் கிறிஸ்மஸ் தினத்தன்று 49ஆவது வயதை எட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் மாதம் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரகரிக்கு கொரோனா தொற்று உறுதியானது. பின்னர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் கொரோனா உறுதியானது. அவர் இரண்டு வாரம் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.