கனடாவில் ஒரே நாளில் 786 பேர் கொரோனாவால் பாதிப்பு

கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 786 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,11,124ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 858 பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், 4 ஆயிரத்து 792 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 97 ஆயிரத்து 474 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர இரண்டு ஆயிரத்து 183 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக, சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா சுகாதார அமைச்சர் டிக்ஸ் ஆகியோர் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளனர். இது சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் கொண்டாட்ட விருந்துகள் மற்றும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் இளையவர்களால் பெரும்பாலும் தூண்டப்படுகிறது என அவர்கள் கூறியுள்ளனர்.