உலகம் முழுவதும் கடந்த மே மாதத்தில் மட்டுமே 6,508,000 வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை

இந்தியா: ஒரே மாதத்தில் 6,508,000 வாட்ஸ்அப் கணக்குகள் தடை .... உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான பயனாளிகள் whatsapp செயலியை பயன்படுத்தி கொண்டு வருகின்றனர். மேலும், பயனர்களின் வசதி மற்றும் பாதுகாப்பிற்காக தொடர்ந்து பல பல அப்டேட்டுகளை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிடப்பட்டு வருகிறது.

இதையடுத்து , Whatsapp செயலியில் பயனர்கள் அனுப்பும் ஒவ்வொரு செய்திக்கும் பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுவதால் whatsapp செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வருகிறது. அந்த வகையில், Whatsapp செயலியின் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்காத பயனாளர்களின் Whatsapp கணக்கு மொத்தமாக தடை செய்யப்படுகிறது.


அந்த வகையில் கடந்த மே 1 முதல் மே 31-ம் தேதிக்குள் மட்டுமே 65 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ் அப் கணக்குகள் தடை செய்யப்பட்டு உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இவற்றில் 24 லட்சத்து 20,700 பயனாளர்களின் கணக்குகள் எவ்வித அறிவிப்பும் இல்லாமலேயே தடை செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், whatsapp செயலியில் பல தரப்புகளிருந்து புகார் அளிக்கப்பட்டு வருவதாகவும், இந்த புகாரின் அடிப்படையில் whatsapp கணக்குகள் மொத்தமாக தடை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.