பாகிஸ்தானில் ஒரே நாளில் 903 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

பாகிஸ்தானில் ஒரே நாளில் 903 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்து உள்ளனர்.

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 903 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 2,78,304 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்களை தேசிய சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,78,304 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 27 பேர் உயிரிழந்ததை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 5,951 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று இதுவரை 2,47,177 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 1,146 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் சிந்து மாகாணத்தில் - 120,550, பஞ்சாப் - 92,873, கைபர்-பக்துன்க்வா- 33,958, இஸ்லாமாபாத் - 15,014, பலுசிஸ்தான்- 11,732, கில்கித்-பல்திஸ்தான்- 2,105 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2,073 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 20,507 மாதிரிகள் உள்பட இதுவரை 19,73,237 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.