தமிழகத்தில் புதிதாக 4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

தமிழகத்தில் புதிதாக 4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கிய நிலையில் சில நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தென் மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புதிய உச்சமாக 4,549 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு, 1,56,369ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக 44,186 மாதிரிகள் இன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இன்று 5,106 பேர் உட்பட இதுவரை 1,07,416பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் 69 பேர் உட்பட மொத்தம் 2,236 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 46,714 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை இன்று 1,157 பேர் உட்பட மொத்தம் 82,128 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையைத் தொடர்ந்து திருவள்ளூரில் இன்று அதிகபட்சமாக 526 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் 267 பேருக்கும், திருவண்ணாமலையில் 206 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 32,695 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 9,68,876ஆக அதிகரித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.