தமிழகத்தில் ரூ.1000 உதவித்தொகை திட்டம் தொலைதூர கல்வி மற்றும் திறந்த வெளி பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு கிடையாது

தமிழகம் : தமிழக அரசு பள்ளியில் பயில கூடிய மாணவர்கள் உயர் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் அரசு மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின் போது நிதியமைச்சர் 6 – 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு அவர்களின் கல்விக்கு உதவும் வகையில் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் சுமார் 6 லட்சம் மாணவிகள் ஆண்டுதோறும் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் குழந்தைகள் திருமணத்தை தடுத்தல், கல்வி இடைநிற்றலை குறைத்தல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றதை அடுத்து உதவித்தொகை பெற தகுதியான மாணவர்களை கண்டறியும் பணி தொடங்கப்பட்டது. தகுதியான மாணவிகளின் பெயர்களை சேர்க்க கடந்த ஜூன் 25ம் தேதி முதல் சிறப்பு முகாம் தொடங்கியது. முதல் நாளிலேயே சுமார் 15,000 மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும் https://penkalvi.tn.gov.in என்ற இணையதளம் வயோலாகவும் தகுதியுள்ள மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் முகாம் ஜூன் 30 வரை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொலைதூர கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டம் பொருந்தாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. .