இலங்கையில் 10 நாட்களில் கொரோனா பலி அதிகரிப்பு

இலங்கையில் 10 நாட்களில் அதிகரித்த கொரோனா பலி... கொரோனாவின் கோரப்பிடியில் உலகமே சிக்கித் தவித்து வருகிறது. இன்னும் சரியான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் அதை தம்மை தற்காத்து கொள்வதே சரியானது என பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்போர் 5 கோடியே 18 லட்சத்து 33 ஆயிரத்து 034 பேர். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 12 லட்சத்து 79 ஆயிரத்து 917 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 64 லட்சத்து 05 ஆயிரத்து 467 நபர்கள். தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் 1,41,47,650 பேர்.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவில் 1,05,68,714 பேரும், இந்தியாவில் 86,36,011 பேரும், பிரேசில் நாட்டில் 57,01,283 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
கொரோனாவை சிறப்பாகக் கட்டுக்குள் வைத்திருந்த நாடுகளில் ஒன்று இலங்கை. ஆனால், அங்கு கடந்த ஒரு மாதமாக கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது.

அதைக் கட்டுப்படுத்த அரசு பல வழிகளில் முயன்றும் முழு வெற்றி கிட்டவில்லை. தற்போதைய நிலவரப்படி இலங்கையில் மொத்த பாதிப்பு 14,715. இவர்களில் 10,183 பேர் சிகிச்சை பலனால் குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர். இவர்களில் 44 பேர் சிகிச்சை பலன் அளிக்காது இறந்துவிட்டனர்.

நவம்பர் மாத தொடக்கமான 1-ம் தேதி 21 பேர் மட்டுமே கொரோனாவால் இலங்கையில் இறந்திருந்தார்கள். ஆனால், 10 நாட்களில் கூடுதலாக 23 பேர் இறந்திருப்பது. அதாவது இரு மடங்கு எண்ணிக்கை கூடியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.