இந்திய வாகனச் சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரிப்பு

புதுடில்லி: விற்பனை அதிகரிப்பு... இந்திய வாகன சந்தையில் 2022 -ஆம் ஆண்டு கார், பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் என அனைத்து ரக வாகனங்களிலும் வாகனங்களிலும் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்துக் கொண்டே வருகிறது.


அதனால் தற்போது ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பிலும் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் வரும் 2023 ஆம் ஆண்டு ஏராளமான புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமாக உள்ளது.



பர்க்மென் ஸ்ட்ரீட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: பெட்ரோல் ஸ்கூட்டர் தயாரிப்பில் தற்போது முன்னணியில் இருக்கும் சுசுகி, ஹீரோ, டிவிஎஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் களை அறிமுகம் செய்ய இருக்கிறது. சுசுகி பர்க்மென் ஸ்ட்ரீட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏற்கனவே தனது யூனிகான் ஸ்டைலால் இந்திய வாடிக்கையாளர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது இதே மாடலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆக தயாரிக்க சுசுகி நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் தற்போது இருக்கும் பெட்ரோல் ஸ்கூட்டரை போலவே ஸ்டைல் அண்டு லுக்கில் மாற்றம் இல்லாமல் உருவாகிறது. 4 kw திறன் கொண்ட என்ஜின் உடன் தயாராக இருக்கும் இந்த ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் தூரம் வரை சென்று வரலாம்.

டிவிஎஸ் கிரியோன்: டிவிஎஸ் நிறுவனம் ஏற்கனவே ஐ க்யூப் என்னும் பெயரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து வெற்றி கண்டுள்ளது. இந்நிலையில் இரண்டாவது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2023 ஆம் ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த கிரியோன் என பெயரிடப்பட்டுள்ள புதிய மாடல் அடுத்த ஆண்டின் இரண்டாவது பாதியில் வெளியாகலாம். ஸ்போர்ட்ஸ் மாடலில் உருவாகும் கிரியோன் 2018 ஆம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அடுத்த வருடம் தான் சாலைகளில் வலம் வரப்போகிறது.