ஒன்ராறியோவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு... ஒன்ராறியோவில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த நான்கு நாட்களில் முதல் முறையாக 100 க்கும் மேற்பட்ட புதிய தொற்றுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 106 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர் இதில் சனிக்கிழமையன்று 92 பேரும் வியாழக்கிழமை 78 பேரும் அடையாளம் காணப்பட்டதாகக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

அந்தவகையில் கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒருவர் இறந்துவிட்டதாகவும், ஒன்ராறியோவில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 2,789 ஆக பதிவாகியுள்ளதாகவும் அம்மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கையுடன் மாகாணத்தின் மொத்த உறுதிப்படுத்தப்பட்ட நோய்களின் எண்ணிக்கை 40,565 ஆகக் கொண்டுள்ளன, இதில் 36,873 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய நோயாளிகளில், பெரும்பான்மையானவர்கள் 20 முதல் 39 வயதிற்குட்பட்டவர்கள். 20 வயதிற்குட்பட்ட 25 புதிய நோயாளிகளும் 60 வயதிற்கு மேற்பட்ட 14 க்கும் குறைவான நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.