இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு

அதிகரிப்பு... இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரேநாளில் சடுதியாக அதிரித்து வருகின்றது.

அந்தவகையில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் மேலும் 124 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரை குறித்த ஆடைத் தொழிற்சாலையில் மொத்தமாக 832 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் யாழ் பல்கலைகஙகழக வவுனியா வளாகத்தில் கற்றுவரும் கம்பஹா பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் காய்ச்சல் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கம்பஹா மற்றும் அதன் அருகிலிருக்கும் பகுதிகளைச் சேர்ந்த வவுனியா வளாகத்தில் கல்வி கற்றுவரும் 90 மாணவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.