வரும் 1ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல்

வரும் செப்டம்பர் 1 ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால் வாகன ஓட்டுனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள 565 சுங்கச்சாவடிகளில் தமிழகத்தில் மட்டும் 48 உள்ளன. வழக்கமாக ஆண்டுக்கு ஒரு முறை சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் உயர்த்தப்பட்ட சுங்கக் கட்டணம் அமலுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

5 முதல் 10 சதவிகிதம் வரை கட்டணம் உயர்வு இருக்கும் என உயரதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் செயல்பட்டுவரும் சுங்கச்சாவடிகளில் ஏற்கனவே ஏப்ரல் 1ம் தேதி கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு உத்தரவால் சுங்கச்சாவடிகள் மூடப்பட்டிருந்த நிலையில், கட்டணம் உயர்வு ஏப்ரல் 16ம் தேதிக்கு அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுங்கக் கட்டண உயர்வால் காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரும் என மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.