கொரோனா தடுப்பூசியை மனிதர்களிடம் செலுத்தி பரிசோதனை தொடக்கம்

மனிதர்களிடம் பரிசோதனை... கொவிட்-19 தடுப்பூசியை மனிதர்கள் மீது செலுத்தி, மருத்துவ பரிசோதனைகளைத் கியூபெக் சிட்டி உயிர் மருந்து தயாரிப்பு நிறுவனமான மெடிகாகோ தொடங்கி உள்ளது.

தாவரத்திலிருந்து பெறப்பட்ட ஒரு தடுப்பூசி அளவை தன்னார்வலர்களுக்கு செலுத்தியுள்ளதாக கனேடிய நிறுவனமான மெடிகாகோ தெரிவித்துள்ளது.

18 வயது முதல் 55 வயதுடைய 180 ஆண்கள் மற்றும் பெண்கள் 21 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது கட்ட தடுப்பூசி அளவைப் பெறுவார்கள். ஒக்டோபரில் இரண்டு அளவுகளுக்கு பாதுகாப்பு மற்றும் செயற்திறன் முடிவுகள் கிடைக்கும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது.

நிறுவனம் வைரஸின் வடிவம் மற்றும் பரிமாணங்களைப் பிரதிபலிக்கும் வைரஸ் போன்ற துகள்களை (விஎல்பி) பயன்படுத்துகிறது. இந்த தடுப்பூசி உடலை அடையாளம் காணவும், தொற்று இல்லாத வழியில் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கவும் அனுமதிக்கிறது.