இலவச பாடசாலை உணவை வழங்கக்கூடாது என்ற முடிவை மாற்ற வலியுறுத்தல்

அரசாங்கத்தின் மீது அழுத்தம்... பிரித்தானியாவில் விடுமுறை நாட்களில் இலவச பாடசாலை உணவை வழங்கக்கூடாது என்ற முடிவை மாற்றியமைக்க அரசாங்கத்தின் மீது அழுத்தம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக பல கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிலைப்பாட்டினை எதிர்ப்பதாக அறிவித்துள்ளனர். அத்தோடு தொழிற்கட்சி மற்றொரு பொது வாக்கெடுப்புக்கு அழுத்தம் கொடுப்பதாக அச்சுறுத்தும் அதேவேளை மேலும் 2,000 மருத்துவர்கள் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அழைப்பு விடுக்கின்றனர்.

தொற்றுநோய்களின் போது பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு உதவ கவுன்சில்களுக்கான நிதியில் பல்லாயிரக்கணக்கான பவுண்டுகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது.

இருப்பினும் விடுமுறை நாட்களில் பிரித்தானியாவில் சுமார் 1.3 மில்லியன் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளுக்கு உணவு வவுச்சர்களை நீடிப்பதை நிராகரிப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு குறித்து டோரி அணிகளில் இருந்து விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.

அந்தவகையில் தொழிற்கட்சியின் தீர்மானத்தை ஆதரிக்காத முன்னாள் டோரி குழந்தைகள் நலன் அமைச்சர் டிம் லொக்டன், கிறிஸ்மஸ் காலத்தில் இந்த முடிவை மாற்றியமைக்க அவர் அமைச்சர்களை கேட்டுக்கொள்வதாக கூறினார். அத்தோடு இந்த பிரச்சினையை அரசாங்கம் மோசமாக கையாண்டது என பாதுகாப்பு அமைச்சர் ஜொனி மெர்சர் டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

இதேவேளை மேலும் இளைஞர்களுடன் பணிபுரியும் 2,000 க்கும் மேற்பட்ட குழந்தை மருத்துவர்கள், விடுமுறை நாட்களில் உணவு வழங்குவதில் ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தை பிரித்தானியா பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.