பாலினம் தொடர்பான வழக்குகளில் சொற்களை கவனமான பயன்படுத்த அறிவுறுத்தல்

புதுடில்லி: கவனமாக இருக்க வேண்டும்... நீதிபதிகள் பாலினம் தொடர்பான வழக்குகளில் சொற்களைப் பயன்படுத்துவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக பெண்கள் தொடர்பான சொற்களை பயன்படுத்துவது குறித்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கற்பு இழந்தவர், மயக்கும் சாகசக்காரி போன்ற சொற்களை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓர் ஆணுடன் திருமணம் தாண்டிய உறவில் உள்ள பெண்ணை திருமணம் செய்யாத பெண் என்று கண்ணியமாகக் குறிப்பிட வேண்டும் என்றும் விபச்சாரி என்ற சொல்லை பாலியல் தொழிலாளி என்று பயன்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஈவ் டீசிங் என்பதை சாலையில் பாலியல் அத்துமீறல் என்று கூற வேண்டும் என்று கூறியுள்ள தலைமை நீதிபதி, பல ஆண்டுகளாக பழகிப் போன சொற்பிரயோகங்களைப் பயன்படுத்துவதில் இருந்து விடுபட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.