சம்பா பருவ நெல் பயிர்களுக்கு காப்பீடு கட்டாயம்

சென்னை: தமிழகத்தில் தற்போது குறுவை பருவ நெல் சாகுபடி முடிந்து, சம்பா பருவ நெல் சாகுபடி காலம் துவங்கி இருக்கிறது.சம்பா பருவத்தில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 13 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெற இருக்கிறது. தமிழகம் முழுவதும் சுமார் 35 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெறும்.

ஆனால் ஆற்று பாசனத்தில் தண்ணீர் இல்லாததால், சாகுபடியை துவங்க முடியாமல் பல மாவட்ட விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதையடுத்து இது ஒரு பக்கம் இருக்க நிலத்தடி நீராதாரம் மூலம் பாசனம் செய்யும் விவசாயிகள் சாகுபடிசெய்ய தொடங்கி இருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து வருகிற அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை பெய்யாமல் போனால் பயிர்கள் பாதிக்கப்படும். அதனால் விவசாயிகள் பயிர்களுக்கு காப்பீடு செய்தால், இந்த இழப்பீட்டை சமாளிக்கலாம்.

எனவே அவர்களுக்கு பயிர் காப்பீட்டை கட்டாயமாக்க வேளாண் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுயிருக்கிறது. பொதுவாக மொத்த சாகுபடி பரப்பில் 50% பயிர்களுக்கு காப்பீடு செய்யப்படும். ஆனால் இம்முறை கூடுதலாக பயிர் காப்பீடு செய்ய திட்டம் வகுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதற்காக மாநில அரசு ரூ.2300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.