அட்டகாச அறிமுகம்... சாரதியில்லா வாகனங்களில் மளிகைப்பொருள் விநியோகம்

கனடா: அட்டகாச அறிமுகம்... மக்கள் வரவேற்பு... ரொறன்ரோவில் ஆளில்லா மளிகைப் பொருள் விநியோக வண்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் சாரதியற்ற இந்த மளிகைப் பொருள் வாகனம் சேவையை ஆரம்பித்துள்ளது. Loblaw Cos என்ற நிறுவனம் குறித்த சேவையை ஆரம்பித்துள்ளது. சாரதியின்றி இயங்கும் வண்டியொன்றின் மூலம் ரொறன்ரோவின் பல பகுதிகளுக்கு மளிகைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றது.

கனடாவில் இந்த தொழில்நுட்பம் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இலகுவில் மளிகைப் பொருட்களை கொள்வனவு செய்து கொள்வதற்கு இந்த புதிய சேவையை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த விநியோக சேவை பரீட்சார்த்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 150000 தடவைகள் தானியங்கு அடிப்படையில் மளிகைப் பொருட்கள் விநியோகம் செய்பய்பட்டுள்ளதாகவும், 100 வீத துல்லியத்தன்மை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பரீட்சார்த்த நடவடிக்கைகளின் போது சாரதியொருவர் சாரதி இருக்கையில் அமர்ந்திருந்தாலும், தானியங்கி அடிப்படையில் வாகனம் செலுத்தப்பட்டது. வாடிக்கையாளர்களிடம் ஆர்டர்களை ஏற்றுக்கொண்டு அவற்றை விநியோகம் செய்யும் பணிகளை இந்த சாரதியற்ற வாகனங்கள் மேற்கொள்கின்றன.