ரயில் டிக்கெட்டுகளை புக்கிங் செய்வதில் IRCTC ஒரு புதிய வசதி அறிமுகம்

இந்தியா: தற்போது IRCTC நிறுவனம் ரயில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அதன்படி IRCTC என்ற ஆப் மூலமாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி மாதத்திற்கு 12 டிக்கெட் வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து இந்திய ரயில்வே நிர்வாகம் ரயில் டிக்கெட்டுகளை 4 மாதத்திற்கு முன்பு முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது. ஆனால் ஒரு சில நேரங்களில் திடீரென்று பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அந்த சமயத்தில் நீங்கள் புக்கிங் செய்தால் உங்களுக்கு டிக்கெட் உறுதி செய்யப்படாது.

அதனால் உங்களுக்கு டிக்கெட் கிடைக்குமா என்ற சந்தேகத்தில் இருப்பீர்கள். இந்த நிலையை தவிர்க்கும் பொருட்டு IRCTC ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இதற்கு முதலில் IRCTC இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
இப்போது உங்களின் பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிட்டு லாக் இன் செய்ய வேண்டும்.
இதையடுத்து ஒரு புதிய பக்கம் திரையில் தோன்றும். அதன் பிறகு ‘உறுதிப்படுத்தல் வாய்ப்பை பெற இங்கே கிளிக் செய்க’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்ததாக உங்கள் காத்திருப்பு டிக்கெட்டின் பிஎன்ஆர் எண்ணை உள்ளிட வேண்டும்.
இறுதியாக உங்கள் திரையில் ரயில் டிக்கெட்டின் உறுதிப்படுத்தல் பற்றி தெரிந்து கொள்ளலாம்.