பிரேசிலில் திருவிழாவின் போது இரும்பு பாலம் அறுந்து விழுந்ததால் பரபரப்பு

பிரேசில்: பிரேசிலில் திருவிழாவின் போது இரும்புப் பாலம் திடீரென அறுந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டவர்கள் ஆற்றில் விழுந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டோரஸ் என்ற இடத்தில் நடைபெற்ற திருவிழாவைக் காண அதிகாலை நேரத்தில் ஏராளமானோர் கூடியிருந்தனர். அவர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்த சிறிய இரும்புப் பாலத்தில் நின்றிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக பாலத்தின் இரும்புக் கயிறுகள் திடீரென அறுந்து விழுந்தன. இந்த விபத்தில் பாலத்தில் இருந்த 100 பேர் ஆற்றுக்குள் விழுந்தனர்.

இதனைக் கண்ட மீட்புப் படையினர் அவர்களை மீட்டனர். ஆயினும் 3 பேரைக் காணவில்லை என்றும் அவர்களைத் தேடும் பணி நடந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.