குஷ்பு கார் விபத்தில் சிக்கியதற்கு அரசியல் பழிவாங்கல் காரணமா? இணையத்தை கலக்கும் கேள்வி

அரசியல் பழிவாங்கலா... குஷ்பு கார் விபத்தில் சிக்கியதற்கு அரசியல் பழிவாங்கலுக்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கடலூரில் நடைபெறும் வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து கடலூருக்கு காரில் சென்றார். அப்போது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கார் சென்ற போது பாண்டிச்சேரி நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி குஷ்பு சென்ற கார் மீது மோதியது.

இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது. காரின் கண்ணாடி உடைந்தது. குஷ்புவிற்கு லேசான காயம் ஏற்பட்டது.  இந்நிலையில் தற்போது குஷ்பூ தனது ட்விட்டர் பதிவில், ''வேல் யாத்திரைக்காக சென்னையில் இருந்து கடலூர் சென்று கொண்டிருந்த போது மேல்மருவத்தூர் அருகே விபத்தை சந்தித்தேன்.

டேங்கர் லாரி ஒன்றின் மீது மோதியது. கடவுளின் ஆசிர்வாதத்தால், எனக்கு எந்த காயமும் இல்லை. காவல்துறையினர் இதை விசாரித்து வருகின்றனர். கடவுள் முருகன் எங்களை காப்பாற்றி விட்டார்''என பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் மாரிதாஸ் என்பவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''திருமதி குஷ்பு சுந்தர் மேல்மருவதூர் அருகே ஒரு விபத்தை சந்தித்தார். லாரி டிரைவர் அப்துல் ஹக்கீம் கைது செய்யப்பட்டார்.

அரசியல் பழிவாங்கலுக்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று விசாரிக்குமாறு நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்''என சந்தேகம் கிளப்பி உள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கி உள்ளது.