சீக்கிய பயங்கரவாதம் மீண்டும் தலைத்தூக்குகிறதா? வெளியான அதிர்ச்சி தகவல்கள்

அமிர்தசரஸ்: நீண்ட நாட்களாக அணைத்து வைக்கப்பட்டிருந்த சீக்கிய பயங்கரவாதம் தற்போது அம்ரித்பால் சிங் மூலம் மீண்டும் தலைதூக்கியுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பஞ்சாபில் சீக்கியர்களுக்கு காலிஸ்தான் என்ற தனி நாடு கோரி வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டவர் பிந்தரன்வாலே. 1982 இல், அவர் தனது ஆதரவாளர்களுடன் பொற்கோயில் வளாகத்திற்குள் நுழைந்து அதை தனது தலைமையகமாக மாற்றினார். அங்கிருந்து இணை ஆட்சியை நடத்தத் தொடங்கினார்.

அவரை வெளியேற்றுவதற்காக இந்திய ராணுவம் ஜூன் 1984ல் ‘ஆபரேஷன் புளூஸ்டார்’ என்ற திட்டத்தை தொடங்கியது. பிந்தரன்வாலே உட்பட பலர் கொல்லப்பட்டனர்.

அதையடுத்து, நீண்ட நாட்களாக அணைத்து வைக்கப்பட்டிருந்த சீக்கிய பயங்கரவாதம் தற்போது அம்ரித்பால் சிங் மூலம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. 29 வயதான அம்ரித்பால் சிங், அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள ஜல்லுபூர் கேரா கிராமத்தில் பிறந்தார். முதலில், அவர் தனது குடும்பத்தின் போக்குவரத்து வணிகத்தில் ஈடுபட்டார்.

அம்ரித்பால் சிங் ஒரு மத போதகரின் அவதாரத்தில் வலம் வருகிறார். பிந்தரன்வாலே ஆதரவாளர் என்றும் காலிஸ்தான் ஆதரவாளர் என்றும் கூறுகின்றனர். பிந்தரன்வாலே போன்றே இவரும் ஆயுதம் தாங்கிய ஆதரவாளர்களால் சூழப்பட்டுள்ளார். எனவே அவரது ஆதரவாளர்கள் அவரை ‘பிந்தரன்வாலே-2’ என்று அழைக்கின்றனர்.