காஸா நகரத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் பீரங்கிப்படைகள்

இஸ்ரேல்: பீரங்கிப்படைகள் தாக்குதல்... காசாவின் வடக்குப் பகுதி நகரத்தை இஸ்ரேலின் பீரங்கிப் படைகள் இருபுறம் சூழ்ந்து தாக்குதல் நடத்தின.

பாலஸ்தீன நிலத்தில் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்திய மூன்றாவது நாளில் , அப்பாவி மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக, தலையிடக் கோரி பாலஸ்தீனம் உலக நாடுகளிடம் பலமுறை முறையிட்டுள்ளது.இஸ்ரேல் சுமார் 600 தீவிரவாத இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கியுள்ளது.

நான்கு முக்கியமான ஹமாஸ் தளபதிகளை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் படை தெரிவித்துள்ளது. கட்டடங்கள் , சுரங்கங்களில் மறைந்து இஸ்ரேல் படைகள் மீது தாக்குதல் தொடுத்து வந்த பலதீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

பொதுமக்கள் தெற்கு நோக்கி செல்லுமாறு எச்சரித்த பின்னர் வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் படைகள் காசாவிற்குள் முன்னேறி வருகின்றன. பாலஸ்தீன மக்கள் எரிபொருள், உணவு, குடிநீர் கிடைக்காமல் தவித்து வரும் சூழலில் நான்காவது வாரமாக போர் தீவிரம் அடைந்துள்ளது.