டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிகளுக்கு அரசு அளித்த பரிந்துரையை ஆளுநர் ரவி நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்

சென்னை: அரசு துறைகளுக்கு தேவையான பணியாளர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நிரந்தர தலைவர் மற்றும்

போதிய உறுப்பினர்கள் இல்லாமல் இருப்பதாக செய்திகள் பல வெளியான நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் 13 உறுப்பினர்கள் நியமனத்திற்கு தமிழ்நாடு அரசு பரிந்துரைத்தது.

இதனை அடுத்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு மற்றும் 10 உறுப்பினர் பதவிகளுக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்து ஆளுநருக்கு அனுப்பியது.

எனினும் ஒரு மாத காலமாக அரசின் பரிந்துரைக்கு ஒப்பந்தல் அளிக்காமல் ஒரு மாத காலமாக ஆளுநர் ரவி டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி நியமனத்தை நிறுத்தி வைத்து உள்ளார்.

ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு பதில் அளித்த பிறகும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று தகவல் கூறப்படுகிறது.