மரக்கட்டைகளை கொண்டு செயற்கை கோள்களை தயாரிக்க உள்ள ஜப்பான்

ஜப்பானின் புதிய முயற்சி... விண்வெளியில் குப்பைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் விதமாக முதல் முறையாக மரக்கட்டைகளைக் கொண்டு செயற்கைக் கோள்களை ஜப்பான் தயாரிக்கவுள்ளது.

Sumitomo Forestry எனும் ஜப்பானிய கட்டுமான நிறுவனமும் கியோட்டோ பல்கலைக்கழகமும் இணைந்து வரும் 2023-ஆம் ஆண்டளவில் மரத்தினால் செய்யப்பட முதல் செயற்கைக்கோளை உருவாக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

பூமியைச் சுற்றி அதன் சுற்றுவட்டப் பாதையில் ஸ்பேஸ் ஜங்க் என சொல்லக்கூடிய லட்சக்கணக்கான விண்வெளிக் கழிவுகள் வலம் வருகின்றன. அவை அனைத்தும் பல ஆராய்ச்சிக்களுக்காக விண்வெளிக்கு அனுப்பட்ட செயற்கைக்கோள்களின் பயனற்ற பாகங்களும், கழிவுகளாக இருக்கின்றன.