புதிய கல்வி கொள்கைக்கு கமல்ஹாசன் வரவேற்பு

மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்த புதிய கல்வி கொள்கைக்கு பெரும்பாலானோர் வரவேற்பும் ஒருசிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திரையுலகை சேர்ந்த வைரமுத்து, குஷ்பு ஆகியோர் இந்த புதிய கல்வி கொள்கையை வரவேற்று தங்களுடைய டுவிட்டர் பக்கங்களில் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் தற்போது மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்து வரும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், புதிய கல்வி கொள்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். அதோடு கூட, இதேபோன்று மருத்துவ துறைக்கும் நாட்டின் ஜிடிபியில் 7 முதல் 8 சதவிகிதம் ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

புதிய கல்விக் கொள்கையில், நாட்டின் GDP-இல் 6% கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது. அதே போல் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையையும் தயார்படுத்த வேண்டும். மருத்துவத்துறை வழக்கமான 1 சதவிகிதத்தில் இருந்து உயர்ந்து 7-8% பங்கினை பெறுவது தேசத்தின் நலனுக்கு இன்றியமையாதது என்று கூறியுள்ளார்.