பிரிட்டன் மந்திரி சபையில் இலங்கை வம்சாவளிக்கு இடமளித்த லீஸ் ட்ரஸ்

லண்டன்: இலங்கை வம்சாவளிக்கு இடம்... பிரித்தானியாவின் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டுள்ள லீஸ் ட்ரஸின் அமைச்சரவையில் புதிய சுற்றுச்சூழல் செயலாளராக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ரணில் ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பிரித்தானியாவின் சுற்றாடல், உணவு மற்றும் கிராமிய விவகாரங்களுக்கான திணைக்களத்தை வழிநடத்தும் அதேவேளையில், ஜெயவர்தன உணவு மற்றும் விவசாயக் கொள்கைகளுக்குப் பொறுப்பாகவும் இருப்பார் என கூறப்படுகின்றது.

இதேவேளை, முன்னதாக சர்வதேச வர்த்தகத் துறையில் கனிஸ்ட அமைச்சராக இருந்த ஜெயவர்தன, புதிய பிரதம மந்திரி டிரஸின் ஆரம்பகால ஆதரவாளராக செயற்பட்டு வந்தார்.


மேலும், 2015 மே மாதத்தில் முதன் முதலில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.