லெனோவோ நிறுவனத்தின் புதிய கேமிங் சீரிஸ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரம்

லெனோவோ நிறுவனம் லீஜியன் பிராண்டிங்கில் கேமிங் ஸ்மார்ட்போனை உருவாக்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனால் லீஜியன் ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது. தற்போது லீஜியன் ஸ்மார்ட்போன் ஜூனை மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என லெனோவோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சீன சமூக வலைதளமான வெய்போவில் டீசர் மூலம் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. லெனோவோ லீஜியன் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்ட சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனாக இருக்கலாம். மேலும், கேமிங் அனுபவத்தை வழங்க ஏதுவாக சக்திவாய்ந்த சிறப்பம்சங்களை கொண்டிருக்கலாம்.

இதன் பக்கவாட்டில் பல்வேறு பாப் அப் கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதால், கேமிங் தவிர ஸ்மார்ட்போனை கிடைமட்ட வாக்கில் பயன்படுத்த முடியும். இதுவரை வெளியான தகவலின்படி, லெனோவோ லீஜியன் ஸ்மார்ட்போன் 90 வாட் வையர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம், இரண்டாவது யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட், நாட்ச் லெஸ் டிஸ்ப்ளே போன்றவற்றை கொண்டிருக்கும்.

இதனை 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்களே போதும். இதனுடன் கேம் பேட்கள் மற்றும் வயர்லெஸ் இயர்பட்ஸ் மற்றும் ப்ரோடெக்டிவ் கேஸ் வழங்கப்படலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.