பிரமதர் மகிந்த ராஜபக்சவுக்கு ஐ.நா.வில் இருந்து வந்த கடிதம்

பிரதமருக்கு ஐ.நா. அனுப்பிய கடிதம்... முஸ்லிம்களின் சடலங்களை எரிப்பது தொடர்பில் இலங்கையில் பல்வேறு விமர்சனங்கள் வெளிவரும் நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஐநாவிடமிருந்து முக்கிய கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளரும், ஐ.நா. அபிவிருத்தி திட்டத்தின் பிரதிநிதியுமான ஹனா சிங்கர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“உயிரிழந்த சடல்களின் தகனம் என்பது அவரவர் கலாசார தேர்வுகளை அடிப்படியாக கொண்டவை. தொற்று நோயால் இறந்தவர்கள் மூலம் வைரஸ் பரவுவதைத் தடுக்க, அந்த சடலங்கள் தகனம் செய்யப்பட வேண்டும் என்ற பொதுவான அனுமானம் ஆதாரங்களால் நிரூபணமாகவில்லை.

அதற்குப் பதிலாக தகனம் என்பது அவரவர் கலாசார தேர்வுகளை அடிப்படையாக கொண்டவை” என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.