கொரோனாவால் பாதித்தவர்களுக்கு ஆயுட்காலத்தில் 10 ஆண்டுகள் குறையுமாம்

10 ஆண்டுகள் குறையுமாம்... கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுட்காலத்தில் 10 ஆண்டுகள் குறைய கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல நிறுவனங்கள் அதற்கான பணிகளில் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

இதனிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதில் இருந்து குணமடைந்த பின்னர் , பிற நோய் தாக்கத்திற்கு ஆளாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் கொரோனா தாக்கம் கண்டு மருத்துவ உலகம் அதிர்ச்சி அடைந்து உள்ளது.

அந்த வகையில், கொரோனா தொற்று ஏற்பட்டால் ஒருவரின் ஆயுட்காலத்தில் 10 ஆண்டுகள் குறைய கூடும் என சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், நீரிழிவு, இருதய நோய் உள்ளிட்ட நோய் உடையவர்களுக்கு குறுகிய காலத்தில் உயிரிழக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் இவ்வாறான நோய்கள் உடையவர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கபட்டால் அவர்களின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் குறையக் கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் உயிரிழப்பதற்குக் கவனக்குறைவே முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.