தென்மேற்கு பருவக்காற்று,வெப்பச்சலனம்‌ காரணமாக ஆகஸ்ட் 18ம் தேதி வரை லேசான மழை பெய்யும்

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக ஆகஸ்ட்15 மற்றும் ஆகஸ்ட்16 தேதிக்கு கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய உள்‌ மாவட்டங்கள்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌.

மேலும் ஆகஸ்ட் 17 தேதி உள்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.என்றும் வெப்பச்சலனம்‌ காரணமாக ஆகஸ்ட் 18ம் தேதி தமிழகம்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக் கூடும்‌ தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. மேலும் நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதே சமயம் 15.08.2021 முதல்‌ 17.08.2021 ஆந்திர கடலோர பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ எதிர்பார்க்கப்படுகிறது.


அதே சமயம் 14.08.2021 முதல்‌ 18.08.2021 வரை: தென்‌ மேற்கு மற்றும்‌ மத்திய மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 50 முதல்‌ 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 70 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என்பதால் மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென தெரிவிக்கப்படுகிறது.