இங்கு 2 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்

வேலூர் : மதுக்கடைகள் மூடல் ..... தமிழின் தொன்மையான இலக்கியங்களில் ஒன்று திருக்குறள். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இந்த திருக்குறளில் மக்களின் வாழ்விற்கு தேவையான அனைத்து கருத்துகளும் 2 அடிகளில் தொகுத்துரைக்கப்பட்டுள்ளது.

உலகம் போற்றும் இந்த நூலை எழுதியவர் என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றே.இவரின் கருத்துக்களை உலக மக்கள் ஏற்றுக் கொண்டதை அடுத்து திருக்குறள் உலக பொதுமறை என அழைக்கப்படுகிறது.

திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர், இயேசு பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் என முடிவு செய்து. அதை தமிழ் ஆண்டாக மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

இதையடுத்து ஆண்டுதோறும் தமிழகத்தில் ஜனவரி 16ஆம் தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

எனவே இந்த தினத்தை முன்னிட்டு ஜனவரி 16 ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் மதுபான கடைகள் மூடப்படும் என்று அந்த மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து ஜன.26ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.