ஊட்டச்சத்து குறைபாடுள்ள தேன் கரடி மீட்பு

பெரு: தேன் கரடி மீட்பு... பெரு நாட்டில் இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள தேன் கரடி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

தெற்கு பெருவின் அரேகிபாவில் உள்ள தேசிய பூங்காக் குழுவினரால் இந்த பெண் தேன் கரடி மீட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

தேன் கரடி தற்போது குணமடைந்து வருவதாகவும், தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கும் எனவும் பெருவின் தேசிய வன மற்றும் வனவிலங்கு சேவையின் மேலாளர் லூயிஸ் பெலிப் தெரிவித்துள்ளார்.

15 முதல் 30 நாட்கள் வரை சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அந்த தேன் கரடி அடுத்த மாதம் காட்டில் விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.