மக்களை தேடி மருத்துவம் திட்டம்..

சேலம்: மக்களை தேடி மருத்துவம் திட்டம் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்தார். இத்திட்டத்தில் இதுவரை 75 லட்சம் பேருக்கு மருத்துவ பெட்டகம் விநியோகம் செய்து உள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்து உள்ளார்.
சேலத்தில் சர்வதேச யோகா தின விழாவில் பங்கேற்ற பின் மா. சுப்ரமணியன் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டில், தொலைதூர மலை கிராமகளுக்கு மருத்துவ சேவை வழங்க ஏற்பாடு செய்யப்படுள்ளது. அங்கு போதிய மருத்துவ வசதி இல்லாதனால் இத்திட்டம் அவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

மகப்பேறு சிகிச்சைக்கு வரும் பெண்கள் யோகா மேற்கொண்டால் சுக பிரவசம் அதிகரிக்கும் ஆதலால் இது கட்டாயமகபட்டுள்ளது.
மக்கள் அனைவரும் உடல் நலத்தை ஆரோக்கியதுடன் வைத்து கொண்டால் எந்த நோயும் பாதிப்பை ஏற்படுத்த முடியாது என்று அமைச்சர் அறிவுரை வழங்கினர்.