தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம்; முதலமைச்சர் தகவல்

முதல்வர் தேர்தல் பிரசாரம்... தமிழகத்தில் 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பத்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார்.

பள்ளிப்பாளையத்தில் பேசிய அவர், தொழில் முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளதாகக் குறிப்பிட்டார். கொரோனா காலகட்டத்திலும் கூட 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு 74 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இன்று காலை சேந்தமங்கலத்தில் பொதுமக்களைச் சந்திக்கும் அவர், நண்பகலில் திருச்சி மாவட்டத்தில் துறையூர், முசிறி, மணச்சநல்லூர், லால்குடி ஆகிய பகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.