கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் அதிகரிப்பு

திண்டுக்கல் : சுங்க கட்டணம் அதிகரிப்பு ..... திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தளமாக விளங்குகிறது. அனைத்து வாகனங்களுக்கும் நகராட்சி சார்பில் சுங்க கட்டணம் இங்கு வசூலிக்கப்பட்டு கொண்டு வருகிறது.

இச்சூழலில் நெடுஞ்சாலை துறை மற்றும் துறைமுகங்கள் துறையின் கீழ் சுங்க கட்டணம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பேருந்துக்கு ரூ 250 , பேருந்துக்கு ரூ 150, கனரக வாகனங்களுக்கு ரூ100, வேன், மினி லாரி மற்றும் டிராக்டர் ஆகிய வாகனங்களுக்கு ரூ 80 மற்றும் சுற்றுலா வாடகை சிற்றுந்து ஆகியவற்றிற்கு ரூ 60 என சுங்க கட்டணம் தற்போது வசூலிக்கப்பட்டுள்ளது.

2 மற்றும் 3 வாகனங்களுக்கு கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து வகையான வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் செலுத்துவதில் நகராட்சி அனுமதி பெற்று விலக்களிக்கவும் இந்த ஆணையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து உரிய ஆவணங்களின் நகராட்சியில் சமர்ப்பித்து தங்கள் வாகனங்களுக்கு அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.