தமிழகத்தில் கனமழை அடுத்த 7 நாட்களுக்கு நீடிக்கும் ...வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: இன்னும் கொட்டிதீர்க்குமாம் கனமழை .... தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு வருகிறது.

மேலும், தமிழகத்தில் வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரைக்கும் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், தமிழகத்திலேயே அதிகபட்ச வெப்பநிலையாக மதுரை விமான நிலையத்தில் 37.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருக்கிறது.


இதனை தொடர்ந்து, கனமழை காரணத்தினால் கடலூர், வேலூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இயல்பான வெப்பநிலையை காட்டிலும் 5 டிகிரி செல்சியஸ் வரைக்கும் வெப்பம் குறைந்து உள்ளதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது. இதையடுத்து சென்னையை பொறுத்த வரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார்குடா பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடல் பகுதிகளில் 45 முதல் 55 km வேகத்தில் காற்று வீசும் இருந்ததால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.