ஆன்லைன் வாயிலாக மின் பயனர்கள் ஆதார் எண்ணை இணைக்கும் முறைகள்

சென்னை: இந்தியாவில் ஆதார் அட்டை ஒவ்வொரு குடிமகனின் அடையாள ஆவணமாக விளங்கி கொண்டு வருகிறது. தற்போதைய கால கட்டத்தில் அனைத்து இடங்களிலும் ஆதார் எண் கேட்கப்படுகிறது. அதனால் சில முக்கிய ஆவண எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அரசு உத்தரவிட்டு வருகிறது.

இதனை அடுத்து அண்மையில் வாக்காளர் அடையாள அட்டையுடனும் ஆதாரை இணைக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடனும் ஆதாரை இணைக்க மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆன்லைன் வாயிலாக மின் பயனர்கள் ஆதார் எண்ணை இணைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மின் இணைப்பு எண்ணுடன் – ஆதார் இணைக்கும் முறைகள் இதோ :

பயனர்கள் முதலில் https://adhar.tnebltd.org/adharupload என்ற இணையப்பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
அதில் Link your service connection with Aadhar என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
அடுத்து வரும் பக்கத்தில் உங்களின் மின் இணைப்பு எண் கேட்கப்படும். அதனை சரியாக பதிவிட்டு Enter கொடுக்க வேண்டும்.
பிறகு மின் இணைப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதனை உள்ளிட வேண்டும். ஒரு வேளை உங்களது மொபைல் எண் பதிவு செய்யப்படவில்லை என்றால் முதலில் Mobile Number Registration என்ற ஆப்ஷனை பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும்.

OTP பதிவிட்ட பிறகு கேப்சா குறியீடு கேட்கப்படும். அதனை பதிவிட வேண்டும். அடுத்தாக ஆதார் விவரங்களை பதிவிட்டு SAMIT கொடுக்கவும்.
இறுதியாக உங்களது ஆதார் – மின் இணைப்பு எண் இணைக்கப்பட்டு விடும்.