மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக சரிவு...89.01 அடியாக நீட்டிப்பு

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்வதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று 5 ஆயிரத்து 75 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 6 ஆயிரத்து 522 கன அடியாக வந்த கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து பாசன வசதிக்காக காவிரியில் 16 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 800 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

கடந்த 29-ந் தேதி 92.81 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து நேற்று 89.81 அடியானது. இன்று நீர்மட்டம் மேலும் சரிந்து 89.01 அடியானது. இதனால் கடந்த 4 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் சுமார் 4 அடி சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.