செப்டம்பர் மாதம் முதல் நீட் தேர்வுகளுக்கு பயிற்சி தொடங்கும் ... அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

தஞ்சாவூர்: பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

காலை உணவுத் திட்டம் குறித்து அறிந்து கொள்வதற்காக தெலங்கானா உயர் அதிகாரிகள் அண்மையில் தமிழகம் வந்தனர்.

இதனை அடுத்து அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் இந்த திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, தங்கள் மாநிலத்திலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

மேலும் பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் முதல் நடைபெறும்.
இதேபோல, நிகழாண்டும் இந்த மாதம் முதல் நீட் உட்பட உயர் கல்வியில் சேருவதற்கான போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என அவர் கூறினார்.