பள்ளிகள் திறப்பது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை!

சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் திறப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வராததால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற வினா பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், தேர்வுத்துறை இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆன்லைன் வகுப்புக்கான நெறிமுறைகள், பள்ளிகள் திறப்பு தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்துகிறார். அதோடு கூட 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களா? கிரேடு முறையா என்பது குறித்தும் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பின்னர் பள்ளிகள் திறப்பது மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.