அரசு பேருந்துகளில் இருக்கைகள் குறைக்கப்பட இருப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவிப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில் 57 இருக்கைகள் உள்ள நிலையில் தற்போது 52 இருக்கைகளாக குறைக்கப்பட இருப்பதாக அறிவிப்பு ..தமிழகத்தில் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் கூடுதல் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது உடல் பருமனாக இருப்பவர்கள் பேருந்தில் பயணிக்க அதிக சிரமப்பட்டு வருவதால் அவர்களுக்கு ஏதுவாக புதிய வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. அதாவது, அரசு பேருந்துகள் 57 இருக்கைகளுடன் இயங்கி கொண்டு வருகிறது. தற்போது உடல் பருமனாக இருப்பவர்களும் சாதாரணமாக பேருந்துகளில் பயணிக்கும் வகையில் கூடுதல் இடவசதி வழங்கப்பட்டு 52 இருக்கைகளாக குறைக்கப்பட்டு உள்ளது.

மேலும், இதில் முதற்கட்டமாக 1400 பேருந்துகள் புதிதாக 52 இருக்கைகளுடன் புனரமைப்பு செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் படிப்படியாக 52 இருக்கைகள் கொண்ட பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து, சுற்றுச்சூழலுக்கு எவ்வித மாசினையும் ஏற்படுத்தாத வகையில் சென்னை மாநகரில் முதற்கட்டமாக 100 மின்சார பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.