பாஜக கூட்டணி முறிந்தாலும் திமுகதான் வெற்றி பெறும் ..அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இடனாக கூட்டத்தில் பாஜக உடன் இனி கூட்டணி இல்லை என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் முடிவெடுத்தனர். இது தொடர்பான தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்மொழிந்தார்.

எனவே அதனை ஏற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 100-க்கு 100 சதவீதம் ஏகமனதாக அத்தீர்மானத்தை நிறைவேற்றினர். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2024 மக்களவை தேர்தலில் மட்டுமல்ல, 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி இல்லை என அவர் கூறினார்.

இந்நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி முறிவு பற்றி கருத்து தெரிவித்து உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும், கூட்டணியை முறித்துக் கொண்டாலும் திமுக தான் வெற்றி பெறும்.

மேலும் அதிமுகவின் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு உள்ளது. தற்போது பொய்யாக கூட்டணி இல்லை என்பார்கள் ஆனால் தேர்தல் நேரத்தில் கூட்டணி வைத்துக் கொள்வார்கள்” என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.