ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான்: இன்று காலையில் மிதமான நிலநடுக்கம் ..... ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் ஃபாசியாபத் அருகே காலை சுமார் 10.10 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. பாய்சாபாத்தில் இருந்து 265 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இதையடுத்து இந்தநிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்பு, உயிரிழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக எதுவும் இன்னும் வெளிவரவில்லை.

துருக்கி-சிரியா, இந்தோனேசியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது, அந்த நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.