அந்தமான் நிகோபர் தீவில் 5.0 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

அந்தமான் நிகோபர் : அந்தமான் நிகோபர் தீவில் 5.0 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி ..... அண்மையில் துருக்கி , சிரியாவில் ஏற்பட்ட நிலடுக்கங்களால் 50,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்புடத்தக்கது.

இதையடுத்து இந்த பேரிழப்பால் ஏற்பட்ட தாக்கத்திலிருந்தே உலக நாடுகள் மீளாத நிலையில், தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட வகையில் உள்ளது. அதிலும் குறிப்பாக இந்தோனேசியா, ஜப்பான், இலங்கை, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

இந்தியாவிலும் சில மாநிலங்களில் நில அதிர்வுகள் ஏற்பட்டன.அந்தவகையில் இந்தியாவின் ஓர் அங்கமான அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை 5.07 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.

எனவே இதனை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்து உறுதிபடுத்தியிருக்கிறது. இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றிய தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இதேபோன்று குஜராத் மாநிலத்திலும் 4.0 என்கிற ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.