150க்கும் அதிகமான கலாச்சார, வரலாற்று பாரம்பரிய தளங்கள் அழிக்கப்பட்டுள்ளது

நியூயார்க்: ஐந்து மாதங்களாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது இதில் பல உக்ரைனின் பல நகரங்கள் சின்னாபின்னமாகி உள்ளது. உக்ரைனும் எதிர்த்து போரிட்டு வருகிறத .இந்நிலையில் 150க்கும் மேற்பட்ட கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரிய தளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாம்.

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை 5 மாதங்களை நெருங்கி விட்ட நிலையில், உக்ரைனில் 150-க்கும் மேற்பட்ட கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரிய தளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐநாவைச் சேர்ந்த வல்லுநர்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். உக்ரைனில் 152 பாரம்பரிய மற்றும் கலாச்சார தலங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ ரஷ்யப் படைகளால் தாக்கி அழிக்கப்பட்டன.

இதனிடையே, உக்ரைனின் கலாச்சாரம் சார்ந்த தளங்களில் ரஷ்யா தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்றும், எந்த ஒரு சூழலிலும் கலாச்சாரம் சார்ந்த தளங்களில் தாக்குதல் நடத்தக் கூடாது என்றும் யுனெஸ்கோ இயக்குநர் தெரிவித்துள்ளார்.