இந்தியாவில் கொரோனாவிலிருந்து 49.41 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணம்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

இந்தியாவில் தினசரி நோய்த்தொற்று ஒரு லட்சத்தை எட்டிய நிலையில், தற்போது குறையத் தொடங்கி உள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மொத்த பாதிப்பு 59,92,533 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 88,600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,124 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 94,503 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 49,41,628 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியினாவில் நேற்று மட்டும் 92043 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். புதிய பாதிப்புகளை விட குணமடையும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,56,402 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.58 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 82.46 சதவீதமாகவும் உள்ளது.