உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து 87 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம்

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இருப்பினும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வருகின்றனர். தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 87 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது.

உலகம் முழுவதும் 1 கோடியே 46 லட்சத்து 33 ஆயிரத்து 412 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடைய 52 லட்சத்து 94 ஆயிரத்து 707 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 59 ஆயிரத்து 878 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பினால் இதுவரை 6 லட்சத்து 8 ஆயிரத்து 542 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும்துவரை 87 லட்சத்து 30 ஆயிரத்து 163 பேர் சிகிச்சைக்கு பின் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.