சுமத்ரா தீவில் மவுண்ட் சினாபங்க் எரிமலை வெடித்து சிதறியது

சுமத்ரா தீவில் உள்ள எரிமலை பயங்கரமாக வெடித்து சிதறியதால் மக்கள் அச்சமடைந்தனர்.

இந்தோனேசியாவில், கடந்த 3 நாட்களில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை வெடித்து சிதறியது.

இதையடுத்து சுமார் 5,000 மீட்டர் உயரத்துக்கு வானில் கரும்புகை சூழ்ந்ததால், பகல்பொழுதும் இரவு போல் காட்சி அளித்தது. எரிமலை வெடித்ததால் எவ்வித பாதிப்பும் ஏற்படாதபோதும், அருகில் உள்ள குடியிருப்புகளில் சிதறியுள்ள சாம்பலை அகற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 3 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள குடியிருப்புவாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இடி முழக்கம் போன்ற சப்தத்துடன் வெடித்து சிதறியதால் மக்கள் வெகுவாக அச்சமடைந்தனர். அந்த பகுதியே கருமையான புகை மூட்டத்துடன் காணப்பட்டது.