புதிய பிரதமராக முஸ்தாபா அதிப் தேர்வானார்

லெபனான் புதிய பிரதமராக முஸ்தாபா அதிப் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் கடந்த ஆக.4-ம் தேதி 2,750 டன் மதிப்பிலான அமோனியம் நைட்ரேட் மருந்து , பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 200-க்கும் அதிகமானோர் பலியாகினர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். இந்த வெடிவிபத்திற்கு ஆளும் அரசின் அலட்சியம் தான் காரணம். உடனடியாக அரசு பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பிரதமர் ஹசன் டெய்ப் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது அமைச்சர்களும் விலகினர்.

இந்நிலையில் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக லெபனான் அதிபர் மைக்கேல் ஆவோன், பார்லி. சபாநாயகர் நபிப் பெர்ரியை சந்தித்து பேசினார். இதையடுத்து புதிய பிரதமராக முஸ்தாபா அதிப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இவர் லெபானானுக்கான ஜெர்மன் தூதராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.