சமயபுரம் கோயில் நிர்வாகத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் மனு

திருச்சி: பேரணியாக வந்து மனு அளித்தனர்... சமயபுரம் கோவில் நிர்வாகத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் பேரணியாக வந்து மனு அளித்தனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவில். தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சொல்கின்றனர். சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ளூர்வாசிகளை கோவிலின் உள்ளே அனுமதிப்பது இல்லை என கூறி கோவில் நிர்வாகத்தை கண்டித்து போஸ்டர்கள் அடித்தனர்.

இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ளூர்வாசிகளை கோவிலுக்கு கட்டணம் இன்றி அனுமதிக்க மறுக்கும் கோவில் நிர்வாகத்தை கண்டித்தும், கோவிலுக்குள் செல்ல கிழக்கு வாசலை அனுமதிக்காததை கண்டித்தும், இடையூறு இன்றி நேரடி தரிசனத்தை காண அனுமதிக்காததை கண்டித்தும்.

பக்தர்களின் தரிசன பாதையை அனைவரும் சரியாக பயன்படுத்த முடியாததை கண்டித்தும் 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் திருச்சி சமயபுரம் நால்ரோடு பகுதியில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள இணை ஆணையர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.

தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணியிடம் மனு அளித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.